Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ்… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..

கரூர், மூக்கணாங்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு என்று புதிய பேருந்து வழித்தடத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி பகுதியில் இரண்டு புதிய பேருந்து வழித்தடம் மற்றும் பத்தாயிரம் லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஜெகதாபி ஊராட்சி பகுதியில் 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை பணியை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார்.

முன்னதாக சத்திரம்பட்டி பகுதியில் இருந்து கரூர் செல்லும் பேருந்து வீரணம் பாளையம் வழியாக புதிய பேருந்து

வழித்தடத்தை எம்எல்ஏ தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புதிய வழித்தடம் பேருந்து வசதி பள்ளி நேரத்தில் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்லும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பேருந்தை எம்எல்ஏ ரிப்பன் வெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ,மாணவிகள் உற்சாகத்துடன் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். அங்கிருந்த பெற்றோர்கள் சந்தோஷத்துடன் கையசைத்து மாணவர்களை பள்ளிக்கு வழியனுப்பி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!