Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் நொய்யல் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…. 1500 பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்…

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோவிலை புனரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஆறு மாதமாக பணி நடைபெற்று வந்த நிலையில் 03.02.2025 அன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று காவிரி ஆற்றில் நீராடிய பின்னர் ஒட்டகம்,குதிரை சுவாமி அலங்காரத்துடன் நடனமாடி அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. சேமங்கி பகுதியில் துவங்கி தீர்த்த குடம் ஊர்வலம்

தொடங்கி முக்கிய சாலை வழியாக மூன்று கிலோமீட்டர் ஊர்வலமாக வந்த பிறகு கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சுமார் 18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த 1,500 க்கு மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் கலந்து கொண்டு தீர்த்த குடத்தை தலையில் சுமந்து வந்தனர். வரும் திங்கட்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

error: Content is protected !!