Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து

வருகிறது. குறிப்பாக புகலூர், வேலாயுதம்பாளையம், புஞ்சை தோட்ட குறிச்சி, தலவாபாளையம், கடம்பன் குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது மழையால் விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!