Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளான இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று கருமேகம்

சூழ்ந்து காணப்பட்ட நிலையில் கரூர் மாநகரப் பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியது.
மாநகர் பகுதியான கரூர் பேருந்து நிலையம்,ஜவஹர் பஜார்,கோவை சாலை வேலுசாமிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டுவிட்டு பெய்ததால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!