Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் பரபரப்பு: வரி குறைக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கைது

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். தனியார் பேருந்து உரிமையாளரான இவர் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறார். இவரிடம் இருக்கும் பழைய பேருந்துக்கு வரி செலுத்த சென்ற அவரிடம், வரி குறைத்து போட்டுத் தர 5000 ரூபாய் லஞ்சமாக கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தருமானந்தம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் அம்ப்ரோஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டை லஞ்சம் கொடுக்க வைத்து, பணத்தை பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலரை கைது செய்து அலுவலக அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் மேலும் அவர் பயன்படுத்தும் வாகனத்தில் சோதனை நடத்தி வேறு யாரிடமும் லஞ்சம் வாங்கி உள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 2022 ஆண்டுகள் முதல் 2026வரை 4 வருடங்கள் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 2 வருடமாக கரூர் மாவட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் இன்னும் மூன்று நாட்களில் பணி மாறுதலில் மீண்டும் புதுக்கோட்டைக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

error: Content is protected !!