Skip to content

தென்மாவட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணபொருட்கள் அனுப்பி வைப்பு…

கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், சாலைகளில் நீர் நிரம்பி வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு உதவும்

வகையில் கரூர் மாவட்ட ஜவுளி ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள், அரிசி மூட்டைகள், பெட்ஷீட்கள் என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!