Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாக்களில் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்வர். இந்தநிலையில் இந்தாண்டு மாசி மகத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா

பிப்ரவரி 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி பெரிய தேரிலும், அனுமன் சுவாமி சின்ன தேரிலும் காட்சியளிக்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 8ம் தேதி தெப்பத்தேர் சுற்றி வருதல் நிகழ்வும், 15-ந்தேதி புஷ்ப யாகத்துடன் திருவிழா முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!