Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காயத்ரி தேவிக்கு ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நேற்று இரவு காயத்ரி தேவிக்கு என்னை காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் சந்தனம், விபூதி பன்னிட்டு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காயத்ரி தேவிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி,

வண்ண மாலைகள் அணிவித்து உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி அம்மாவாசை சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!