Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்… 1 லட்சம் வளையல் அலங்காரம்…

ஆடி மாதத்தை ஒட்டி அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்

வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேம்பு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!