Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் விஜயபாஸ்கர் முன்ஜாமீன் விவாதம் லைவ் வீடியோ… இளைஞர் கைது…

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மூன்று தரப்பு விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றது. இந்த விவாதங்களை செல்போன் மூலம் (வீடியோ கால்) வீடியோ எடுத்து விஜயபாஸ்கரின் உறவினருக்கு தமிழினியன் (29) என்ற இளைஞர் லைவ்வாக வீடியோ அனுப்பிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வை வீடியோ எடுத்த அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து நீதிமன்ற எழுத்தர் வீரக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வீடியோ எடுத்த தமிழினியனை தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!