Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டில் தங்க நாணயங்கள்-பணம் கொள்ளை….

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே மாலபாளையம்புதூரில் வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 57). இவர் ஆடு மாடு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை சுமார் பத்தரை மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பிறகு மீண்டும் பகல் சுமார் ஒன்றரை மணி அளவில் வீட்டுக்கு வந்து

பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 10 பவுன் தங்க நாணயங்கள் ரூ 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் க.பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!