Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் 2ம் வகுப்பு மாணவன் 2 புதிய உலக சாதனை….

கரூரை அடுத்த வெண்ணைமலையில் செயல்படும் தனியார் (பரணி வித்யாலயா) பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திவ்யதர்ஷன். இந்த மாணவன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும், 247 தமிழ் உயிர், மெய் எழுத்துக்களை 28 நொடிகளில் சொல்லி இரண்டு புதிய உலக சாதனையை செய்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்வில் டிஸ்கவர் சாதனை புத்தக நடுவர் பாலாஜி கலந்து கொண்டு இந்த சாதனைக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கி பாராட்டினார். ஆங்கில வார்த்தைகளை குஜராத்தை சார்ந்த குப்தா என்ற 6 வயது சிறுவன் ஒரு நிமிடம் 40 விநாடிகளில் செய்த சாதனையை 40 விநாடிகளில் சொல்லியும், தமிழ்

எழுத்துகளை பாண்டிச்சேரியை சார்ந்த 12 வயது சிறுமி ரித்திகா 81 விநாடிகளில் சொல்லியதை 28 விநாடிகளில் சொல்லி பழைய சாதனைகளை முறியடித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மாணவ, மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாணவனை பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!