திருச்சி ,பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று தொடங்கின.இரண்டு நாட்கள் போட்டி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று போட்டிகளை பள்ளி தாளாளர் அருட் பணி தீபன் குழந்தை ராஜ் தொடங்கி வைத்தார். வட்டார அளவில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் , இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா, போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியை அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடற் இயக்குனர் திரு ராபின்சன் ஹென்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பால்,செய்தி தொடர்பாளர் லூயிஸ் மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் விழாவில் கலந்து கொண்டனர்
