சென்னை கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் நேற்று தகவல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை
