Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை… 10 வயது சிறுமியை நாய் கடித்தது…

கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார். இவருடைய மகள் அக்சயா கீர்த்தி (10). 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் கட்டப்படாமல் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று திடீரென்று ஆக்ரோஷமாக ஓடி வந்து சிறுமி மீது பாய்ந்து கழுத்து, தோள்பட்டை, காது உள்ளிட்ட இடங்களில் கடித்துக்குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறித்து துடித்தார்.  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!