Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை… சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில்… சாயப்பட்டறை கழிவு…

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நொய்யலாற்றில்  நீர்வரத்து துவங்கியுள்ளது.

இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர் கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த தடுப்பணை ஒருகாலத்தில் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது என்பது குறிப்புடத்தக்கது. தற்பொழுது நொய்யலாற்று நீர்வழி தடங்களை தூர்வாராததும், நீர்வழித்தட வழிதடங்களின் அருகில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் அருகில் இருக்கும் வீடுகளில் இருந்து வெறியேறும் கழிவுநீர், வாய்க்கல் வழியாக நொய்யலாற்றில் கலக்கிறது. இதனால்  காளவாய் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் நுரையுடன் வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!