Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

கோவை, பொள்ளாச்சி பகுதியில் நடிகர் யோகி பாபு நடித்து வரும் புதிய சினிமா படம் நடிப்பு நடைபெற்று வருகிறது.இந்திலையில் நடிகர் யோகி பாபு கிணத்துக்கடவில் உள்ள பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுத சாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகர் யோகி பாபு பொன்மலை வேலாயுதசாமியை தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பகுதியில் உள்ள காசி விசுவநாதர் ,விநாயகர் உள்ளிட்ட சாமிகளையும்

வணங்கினார். பின்னர் பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் பின்பகுதியில் வேலாயுதசாமி கால் பாதம் அமைந்துள்ள பகுதியை சுற்றி வந்து தரிசனம் செய்தார் .நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்ய வேலாயுதசாமி கோயிலுக்கு வந்ததை அறிந்த பக்தர்கள் யோகி பாபு உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் கார் மூலம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள கிளம்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!