Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் டைல்ஸ் கடையில் தீ விபத்து… 50 லட்சம் பொருட்கள் சேதம்..

கோவை பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பியஸ் ஆர் தாத்தே. ராஜஸ்தானை சேர்ந்த இவர், கோவையில் பிறந்து வளர்ந்ததுள்ளர். இவர் பூமார்க்கெட் தேவாங்கபேட் வீதி 2ல் ராஜகுரு என்ற பெயரில் நான்கு மாடி கட்டிடத்தில் டைல்ஸ் மற்றும் சேனிட்டரிவேர்ஸ், சிபி பிட்டிங்க்ஸ் உள்ளிட்ட பொருட்களை கடந்த 8 வருடமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை கடையை திறந்துள்ளார். அப்போது

மின்கசிவு ஏற்பட்டு, தீ பரவியுள்ளது. இதனையடுத்து மின்சாரத்தை துண்டித்துள்ளார். கீழ் தளத்தில் பரவிய தீயால் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை தண்ணீர்கொண்டு அணைத்தனர். சிறிது நேரத்திற்கு, கீழ் தளம் மற்றும் முதல்மாடியில் இருந்து புகை வெளியேறியது. தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இதனையடுத்து ஆர் எஸ் புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!