Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

கிருஷ்ணகிரி மாவட்டம்  பொன்மலைக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணை  சுரேஷ், நாராயணன் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அப்போது  சுரேசும், நாராயணனும்  பொன்மலைகுட்டை  மலையில் உள்ள பெருமாள் கோவில்  பின்புறம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தவல் கிடைத்தது.

இதையொட்டி போலீசார் அங்கு சென்றனர். அப்போது இருவரும்  போலீசாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர்.  அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு இருவரையும் பிடித்தனர். இதில் சுரேஷ் காலில்  குண்டு பாய்ந்தது. நாராயணனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் போலீசார் பிடித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்ததும் எஸ்.பி. தங்கதுரை சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டார்.  இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

error: Content is protected !!