Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

94 குழந்தைகள் பலி……குடந்தை பள்ளி தீ விபத்து……19 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு  ஸ்ரீ கிருஷ்ணா  தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, காசிராமன் தெருவில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.   தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் பள்ளி முன் வைக்கப்பட்டிருந்தது. அங்கு  பெற்றோர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்திற்க சென்று  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாலை 6 மணி அளவில் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!