நங்கவரம் அருகே தனது தந்தை வழங்கிய நிலத்தை அபகரிக்க போலீசாரின் உதவியுடன் செயல்படுவதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும், விதவை பெண் பரபரப்பு குற்றச்சாட்டு.
கரூர் மாவட்டம், நங்கவரம் கிராமத்தில் விதவை பெண்ணின் 2 ஏக்கர் 10 சென்ட் பாரம்பரிய நிலத்தை தவெகவினர் மிரட்டி அபகரிக்க முயல்வதாகவும், போலீசாரும் இதற்கு துணை போவதாகாவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கலாவதி. விதவைபெண் ஆன, இவர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூர் மாவட்டம் நங்கவரம் கிராமத்தில் 9 ஏக்கர் நிலத்தை தனது தந்தை எழுதி கொடுத்துள்ளார். அதை நான் அனுபவித்து வருகிறேன்.
இந்த நிலத்தின் அருகே உள்ள தனது சகோதரர் விற்ற நிலத்தின் உரிமையாளர். மாப்பிள்ளை மீரான் என்பவர், எனது பெயரில் உள்ள 2 ஏக்கர் 10 சென்ட் பரப்பளவுள்ள நிலத்தை தனக்கு எழுதி கொடுக்கும்படி தொடர்ந்து மிரட்டுகிறார்.
மேலும், நங்கவரம் காவல் நிலையத்தில் தன் மீது பொய் புகார் கொடுத்து தன்னை போலீஸ் நிலையத்திற்கு அலைய வைத்து, எனது நிலத்தை பறிக்க திட்டமிட்டு மிரட்டி வருகிறார்.
இதற்கு நங்கவரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் துணை போகிறார்கள். தன்னை தேவையில்லாமல் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து நிலத்தை மீரான் மாப்பிள்ளைக்கு எழுதி கொடுக்கும்படி மிரட்டுகிறார்கள்.
மேலும் தவெக நிர்வாகிகளை அழைத்து வந்து வீட்டில் நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு விரட்டுவதாகவும்.
இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அஞ்சுகிறேன்.
எனவே எனது நிலத்தை அபகரிக்க முயலும் மீரான் மாப்பிள்ளை மீதும், அவருக்கு துணை போகும் போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தார்கள் பேட்டியளித்த கலாவதி …. திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்த தவெகவினர் காரில் கொடியுடன்,, வந்து தனது நிலத்தை ஆக்கிரமிக்க முயல்வதாவும்,தெரிவித்தார்.
