தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உள்துறைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
சட்டம் ஒழுங்கு – தலைமைச்செயலாளர் ஆலோசனை
