Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழக்கறிஞர் பாலு நீக்கம்- டாக்டர் ராமதாஸ் அதிரடி

பாமகவில்  டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள  மோதல்,  கட்சியிலும் எதிரொலிக்கிறது.  இது நான் தொடங்கிய கட்சி என கூறும் ராமதாஸ், அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார்.

அதுபோல  அன்புமணி, ராமதாசின் ஆதரவாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவராக  இருந்த   பாலுவை டாக்டர் ராமதாஸ் அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார். அவருக்கு பதில், வழக்கறிஞர் கோபு வை நியமனம் செய்துள்ளதாக  ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அதுபோல, மாநில துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ், திருவள்ளுவர் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளராக ராசா சங்கர் , கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக வினோத் ஆகியோரை  டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

error: Content is protected !!