Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோடை வெயிலால் எலுமிச்சை விலை உயர்வு

கோவையில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால் எலுமிச்சைக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. தற்போது எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மற்ற பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் பழங்களின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:-
மாதுளை-ரூ.240, கருப்பு திராட்சை-ரூ.100, ஆரஞ்சு-ரூ.140, சாத்துக்குடி-ரூ.60, ஆப்பிள்-ரூ.280, தர்பூசணி-ரூ.30, முலாம்பழம்-ரூ.35, பப்பாளி-ரூ.32.
மேலும் காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- தக்காளி (நாடு) ரூ.20, தக்காளி (ஆப்பிள்) ரூ.22, சின்ன வெங்காயம்-ரூ.30, பெரிய வெங்காயம்-ரூ.20, மிளகாய்-ரூ.42, கத்தரிக்காய்-ரூ.44, வெண்டைக்காய்-ரூ.58, அவரை-ரூ.62, பாகற்காய்-ரூ.45. இந்த தகவலை வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!