Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

சிகிச்சை பெற்ற முசிறி ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

திருச்சி மாவட்டம், முசிறி திருப்பஞ்சலி பகுதியை சேர்ந்தவர் உத்தண்டன் ( 77) இவர் ஆயுள் தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறையில் கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் சர்க்கரை நோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து
முத்தையன் உடல் நலக்குறைவால் கடந்த 28ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரி ராஜேஷ் கண்ணா அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜெ.எம் 4. நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.

தையல் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் தேவபிரபு (வயது 47) இவர் தற்சமயம் கருமண்டபம் புன்னகை வீதி பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். இவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தையல் கடையில் நஷ்டம் ஏற்பட்டத்தை தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்ட தேவ பிரபு நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த மனைவி சரோஜினி உடனடியாக செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய தேவ பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்துசெசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!