Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்த மழையின்போது மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியானார்கள் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி தெரிவித்தார்.  மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!