Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மது விற்பனை… 26 மதுபாட்டில்கள் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் சாவு… உடலை கைப்பற்றி
போலீசார் விசாரணை..

திருச்சி பஸ் நிலையத்தில் தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது.சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வாக்குகளை அளித்தனர்.இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சின்ன உஞ்சனை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன்
உமேஸ்வரன் (வயது 40) என்பவர் சென்னையில் இருந்து சிவகங்கை செல்வதற்காக பஸ் மூலம் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் வந்தார்.பின்னர் சிவகங்கை செல்வதற்காக பஸ் ஏறுவதற்கு நின்று கொண்டிருந்தார்.அப்போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்து பஸ் நிலையத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது தாய் கருப்பாயி அளித்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிந்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஓட்டு போட வந்த பயணி பஸ் நிலையத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கள்ளத்தனமாக மது விற்பனை.. ஒருவர் கைது; 26 மது பாட்டில்கள் பறிமுதல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது.இதற்காக தேர்தல் பிரச்சாரம் 21-ந் தேதி முடிவடைந்தது.இந்நிலையில் மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி திருச்சி உள்பட தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன.இந்நிலையில் திருவரங்கம் மேலூர் பஜாரில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திவ்ய பிரியா தலைமையிலான போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.அப்போது மேலூர் பஜார் பகுதியில் மது விற்றதாக மேலூர் ஹரிசனத் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!