Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்தலாரி-டிரைவர் படுகாயம்

பரமக்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி பருத்திப் பஞ்சு ஏற்றிச் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை பரமக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவர் ஓட்டிச் சென்றார்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை இந்த லாரி கடக்கும் போது திடீரென்று விபத்துக்குள்ளானது. பொன்மலை ரெயில்வே மேம்பாலத்தை கடப்பதற்கு முன்பாக, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது சாலையின் நடுவே இருந்த இரும்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு, சுமார் 25 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் பாஸ்கருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் திடீரென்று தங்களுடைய வாகனத்தை நிறுத்தி கவர்ந்த லாரியை பார்த்துக் கொண்டு இருந்தனர் இதனால் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் பொன்மலை ரயில்வே மேம்பால பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!