திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கி சென்றனர்.
இதையடுத்து ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
அப்பொழுது போலீஸ் ஏட்டு ராஜலிங்கம், போலீஸ் சந்தானம் ஆகியோர் ரெயில் பெட்டியில் பயணிகளின் இருக்கைகளை சோதனை செய்தபோது அங்கு ஒரு பேக் இருந்தது அந்த பேக்கில்
தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அதனை கைப்பற்றி சோதனை செய்தபோது அதில் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது திருச்சி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 62) என்பவரது என்று தெரிய வந்தது. மேலும் இவர் சென்னையில் இருந்து திருச்சி வந்த போது தனது பேக்கை தவறவிட்டார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் நகையை தவற விட்டதேவராஜ்க்கு தகவல் தெரிவித்து அவரை வரவழைத்து தங்க நகைகளை அவரிடம் ஒப்படைத்தனர்
