Skip to content
Home » கேதார்நாத் கோயிலில் காதலை உறுதிப்படுத்திய காதல்ஜோடி…. வீடியோ வைரல்

கேதார்நாத் கோயிலில் காதலை உறுதிப்படுத்திய காதல்ஜோடி…. வீடியோ வைரல்

உத்தரகாண்ட் மாநிலம்  இமயமலை தொடரில் கேதர்நாத் கோயில்  அமைந்துள்ளது. சிவ தலமான இங்கு ஏப்ரல் முதல் நவம்பர் வரை பக்தர்கள் செல்வாார்கள்.  தற்போதும் இங்கு பக்தர்கள் சென்று வருகிறார்கள். சமீபத்தில் இந்த கோயிலுக்கு  வந்த ஒரு இளம்பெண், (மஞ்சள்  சேலை, ஜாக்கெட் அணிந்து உள்ளார்) கோயிலில் தனது காதலனை பார்த்து  மண்டியிட்டு  புரபோஸ் செய்கிறார்.

அவரும் மஞ்சள் உடையில் இருக்கிறார். அவர் காதலை ஏற்றுக்கொண்டு காதலியை கட்டித்தழுவுகிறார். தெய்வீகமான காதலை தெய்வ சந்நிதியில் வெளிப்படுத்தி, உறுதிப்படுத்திய இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பகீரப்பட்டு வருகிறது.   இவர்களது பெயர், ஊர் போன்ற விவரங்கள் கூறப்படவில்லை. ஏற்கனவே அவர்கள் மனதில் மொட்டு விட்டிருந்த காதல், கேதார்நாத்தில் மலர்ந்து உள்ளது போல தெரிகிறது.  தெய்வ சந்நதியில் தான் காதலை உறுதிப்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் வந்தவர்கள் போலத்தான் தெரிகிறது. வந்த இடத்தில் திடீரென பற்றிக்கொண்ட காதல் போல அது தெரியவில்லை.   இந்த   ரொமான்ஸ் புரபோஸ் காட்சி வைரலாகி வரும் நிலையில், ட்விட்டர் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பெரும்பாலும் நல்ல கமெண்ட்ஸ்கள் தான் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!