முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், வரும் ஜூலை 15-ஆம் தேதி DVAC (லஞ்ச ஒழிப்புத்துறை) விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தொடர்ந்த மனுவுக்கு, ஜூலை 27-க்குள் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
