ஷர்ஜாவிலிருந்து நேற்று (ஜூலை 9) கராச்சி நோக்கி சென்ற கே2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 சரக்கு விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், பலுசிஸ்தான் கடற்கரையில் அதன் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்த 5 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாக இருக்கும் வேளையில், பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ்-சல்பிகர் கப்பல் மற்றும் விமானப்படை இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
