குஜராத் மாநிலம் அம்ரேலி அருகே இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த சிங்கங்களை அருகில் சென்று பார்க்க முயன்ற 21 வயது இளைஞர் சிங்கம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 இளைஞர்கள் சிங்கங்களை மிக அருகில் சென்று பார்த்தபோது, சீற்றமடைந்த சிங்கங்கள், அவர்களைத் தாக்கின. இதில் சோஹில் மெமன் என்பவர் உயிரிழந்தார். தகவலறிந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிங்கங்களை விரட்டியடித்து, இளைஞரின் உடலை மீட்டனர்.
