Skip to content

மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை   போலீஸ்காரர்  மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் காவலர் மலையரசன் எரித் கொல்லப்பட்ட  வழக்கில் ஆட்டோ டிரைவர்  மூவேந்திரன் என்பவர் மீது  போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் மூவேந்திரனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்   எஸ்.ஐ. மாரிகண்ணன் என்பவரை வெட்டிவிட்டு, போலீசாரின் பிடியில் இருந்து தப்பமுயன்றார். 

இதையடுத்து அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த, மூவேந்திரனை போலீசார் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவலர் கொலை வழக்கில் போலீசார் ஒருவரை சுட்டுப்பிடித்த சம்பவம்  மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்ல,  தமிழகம்  முழுவதும் உள்ள ரவுடி கும்பல்  மத்தியில் அச்சமும், கிலியும் பிடித்துள்ளது.

error: Content is protected !!