செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் 28 வேட்பு மனுக்களும், தாராபுரத்தில் 22 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக, சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
