Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லி செருப்புத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

டில்லி செருப்புத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

டில்லி மங்கோல்புரி தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு செருப்புத் தொழிற்சாலையில் நேற்று இரவு 9:30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் 4 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். எஞ்சிய 2 பேர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்ததும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. தொழிற்சாலையின் அடித்தளத்தில் தொடங்கிய தீ, புகை காரணமாக மேல் தளங்களுக்கும் பரவியுள்ளது. கடுமையான புகைமூட்டத்திற்கு மத்தியில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தொழிற்சாலையின் உரிமையாளருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதோடு, ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

error: Content is protected !!