Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கண்டியூரில் பெரியார் சிலை அகற்ற உத்தரவு – போலீஸ் பாதுகாப்பு!

தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் முன்பாக நிறுவப்பட்டுள்ள ஈ.வெ. ராமசாமியின் சிலையை 4 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டதை அடுத்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

மதுரை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தஞ்சை, கண்டியூர் அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் கோவில் முன்பாக இந்து சமய

அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறாமல் 1990ஆம் ஆண்டு திராவிடர் கழக அமைப்பால் ஈ.வே.ராமசாமியின் சிலை நிறுவப்பட்டது.

கோயிலின் முன்பாக 5 அடி ஈவேரா சிலை நிறுவப்பட்டுள்ளது. அதோடு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சிலைக்கு அருகில், கட்சி கொடிகளும் நிறுவப்பட்டுள்ளன. நிலத்தில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற உத்தரவிட்ட போதிலும், இந்த சிலை ஆற்றப்படவில்லை. எனவே தஞ்சை திருவையாறு கண்டியூர் அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் முன்பாக நிறுவப்பட்டுள்ள ஈ.வெ. ராமசாமியின் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக 30ம் தேதி விசாரணைக்கு வந்தது

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வாரத்திற்குள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பாக சிலையை அகற்றி வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்க உத்தரவிட்டனர்.

இதில் அடுத்து பதற்றமான சூழல் ஏற்படாமல் தடுக்க சிலை அருகில் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!