சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு திமுக மகளிர் அணி சார்பில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பின்மை மற்றும் தொடரும் விலைவாசி உயர்வை கண்டித்து, திராவிட நாயகர் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி, கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.
மேலும், கழகப் பேச்சாளர்கள் நிரஞ்சனா செந்தில்குமார், கவிதா கல்யாணசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கோரியும், பொதுமக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வை எதிர்த்தும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்

சேர்ந்த மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன கோசம் எழுப்பினர்.
