மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, இன்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அடுத்தடுத்து இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார், கோயிலில் ஏற்பட்ட உள் கோளாறு காரணமாகவே மின் விநியோகம் தடைபட்டதாகவும், ஜெனரேட்டரிலிருந்து மின்வாரியத்திற்கு மின் இணைப்பு மாற்றப்பட்டதால் சில நிமிடங்கள் தடை ஏற்பட்டதாகவும் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி கோயிலில் துணை ஜனாதிபதி பேட்டியின் போது மின்தடை
