Skip to content

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடல்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் மீது கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் 130 ஆண்டுகளாக வஙக்கடலில் பயணிக்கும் கப்பல்கள், படகுகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் அழகிய தோற்றத்தையும், புராதன சின்னங்களையும், கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தையும் கண்டுகளிக்கலாம்.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இவற்றை கண்டுகளிக்க வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் 25. இந்தியர்களுக்கு ரூபாய் 10. சிறுவர்களுக்கு ரூபாய் 5. என கட்டணம் வசூலிக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் மத்திய கலங்கரை விளக்ககங்கள் துறையின் சார்பில் கலங்கரை விளக்கத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் தற்போது சாரம் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் இனி பராமரிப்பு பணிகள் முடியும் வரை சுற்றுலா பயணிகள் இனி கலங்கரை விளக்கத்தை ஏரி சுற்றி பார்க்க அனுமதி இல்லை. அங்குள்ள நுழைவு கட்டண கவுண்டரும் மூடப்பட்டது. இதையடுத்து இன்று கலங்கரை விளக்கம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!