Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொய் சொல்றாராம் மம்தா… நிர்மலா சீதாராமன் விளக்கம் ..

நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார் கூறியிருந்த நிலையில் அது உண்மையில்லை  என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது… நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் உரையை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அது திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேரம் முடியும்போது அதை நினைவூட்டுவதற்காக கூட்டத்தை நிர்வகித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மைக்கில் தட்டி ஒலி எழுப்பினார். யாரெல்லாம் நேரத்தைக் கடந்து பேசினார்களோ அவர்கள் அனைவர் விஷயத்திலும் இது நடந்தது. ஆனால், தனது மைக்  அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறு. ஒவ்வொரு முதல்வரும் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், மைக் அணைக்கப்பட்டதாக அவர் கூறியது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையில்லை. மறுபடியும் பொய்யை அடிப்படையாக கொண்ட கதையை உருவாக்குவதை விட, அவர் உண்மை பேச வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். அதேபோல் நிதி ஆயோக்  துணைத்தலைவர் கூட்டத்தின் இறுதியில் நிருபர்களிடம் பேசுகையில் மம்தா வெளியேறிய பிறகும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றதாக விளக்கம் அளித்தார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!