Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடுகளை குறிவைத்து கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற நபர் கைது..

வீடுகளை குறிவைத்து கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற நபர் கைது..

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் பூட்டியிருக்கும் ஆளில்லாத வீடுகளைக் குறிவைத்து கியாஸ் சிலிண்டர்களைத் திருடி வந்த விஜயகுமார் (35) என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பூட்டியிருந்த வீடொன்றில் புகுந்து சிலிண்டரைத் திருட முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் சிலிண்டர்களைத் திருடியிருப்பது அம்பலமாகியுள்ளது.

திருப்பாச்சூர் பகுதியில் உள்ள ஒரு ஆளில்லாத வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த கியாஸ் சிலிண்டரைத் திருட முயன்றுள்ளார். அப்போது, அக்கம்பக்கத்தினர் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த நபரைச் சூழ்ந்து கொண்டு அதிரடியாகப் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், பிடிபட்ட நபர் 35 வயதான விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய தீவிர முதற்கட்ட விசாரணையில், தற்போதைய திருட்டு முயற்சி மட்டுமன்றி, போலீசாரிடம் பிடிபடுவதற்கு முன்பாகவே திருப்பாச்சூர் மற்றும் திருவள்ளூரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று, பூட்டியிருந்த ஆளில்லாத வீடுகளில் புகுந்து தொடர்ச்சியாகப் பல கியாஸ் சிலிண்டர்களைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!