Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மைனர் பெண்ணுக்கு மிரட்டல்; போக்சோவில் கைதான நபர் மீண்டும் கைது

ஆம்பூரில் மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர் போக்சோவில் கைதான நிலையில் மீண்டும் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் கைது செய்யபட்டார். ஆம்பூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஆம்பூர் பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த டிரைவரான வெங்கடேசன் மகன் அரவிந்த் (29) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் அந்த சிறுமியை கடந்த ஆகஸ்டு மாதம் வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். தனது மகளை காணாத அவரது பெற்றோர் இதுபற்றி கடந்த ஆக. 22 ம் தேதி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அரவிந்த்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

பின்னர், இவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில் கடந்த 14ம் தேதி மீண்டும் அந்த சிறுமியிடம் சென்று தன்னுடன் வர வேண்டும் எனவும், தவறினால் தன்னுடன் பழகிய நிலையில் உள்ள வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்புவதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி நேற்று ஆம்பூர் டவுன் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ஆம்பூர் கிளை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!