Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஹ்மான் பக்ருதின் கபூர் (வயது 25(). இவரது உறவினர் ஏர்போர்ட் விஓசி நகரை சேர்ந்த ரபீக் (40). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17-ந்தேதி கே.கே. நகர், கே. சத்தனூரில் நடந்த ஒருவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக சென்றனர். அப்போது, ​​குடிபோதையில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ரபீக், ரஹ்மான் பக்ருதீன் கபூரை தகாத வார்த்தைகளால் திட்டி, மரக்கட்டையால் தாக்கினார். இந்தச் சம்பவத்தில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ரபீக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!