நர்ஸ் கணவர் தற்கொலை…
திருச்சி, மணப்பாறை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி பிரபாகர் (53) இவரது மனைவி கிளாடிஸ் பிரேமா சுந்தரி ( 51 )இவர் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். ஜோதி பிரபாகருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
மனைவி கொடைக்கானலில் வேலை பார்த்து வந்த நிலையில் மணப்பாறையில் உள்ள வீட்டில் ஜோதி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தனக்கு வாழ விருப்பமில்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் எனக் கூறிவந்துள்ளார். ஆனால் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜோதி பிரபாகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது பற்றி அவரது மனைவி கிளாடிஸ் பிரேமா சுந்தரி மணப்பாறை போலீசில் புகார் செய்தார் . போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மது பாட்டிலை மனைவி பிடுங்கி எறிந்ததால் தொழிலாளி தற்கொலை
ஜம்புநாதபுரம் அருகே உள்ள பேரூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் (60).
தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தார்.
கடந்த 25ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த சங்கரன் மீண்டும் வீட்டு முன்பு ஹாயாக அமர்ந்து ஒரு மது பாட்டிலை திறந்து மது குடிக்க முயன்றார். இதை பார்த்து கோபமடைந்த அவரது மனைவி தனம் மது பாட்டிலை பிடுங்கி தூக்கி எறிந்து விட்டார். இதனால் மது பாட்டில் உடைந்து மது கீழே கொட்டியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கரன் யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர் மனைவி அவரை மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
மது குடிக்க கடன் வாங்கிய வாலிபர் திடீர் தற்கொலை சென்னை புது
திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள இனாம் புலியூர் போதாஊர் வடக்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் அருண்குமார் (23) மதுவுக்கு அடிமையான இந்த வாலிபர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.
மேலும் மது குடிக்க தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி வந்துள்ளார். இதைக் கண்டு பெற்றோர் பலமுறை கண்டித்து பார்த்தனர். ஆனால் அவர் திருந்தவில்லை இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்குமார் யாரும் எதிர்பாராத வகையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
