Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரவாக்குறிச்சிக்கு பல திட்டங்கள்… திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரம்

35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையம், 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என வாக்கு சேகரிப்பில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பேச்சு.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளங்கோ மீண்டும் 2026 வேட்பாளராக போட்டியிடுகிறார் நாள்தோறும் கிராமம் கிராமமாக சென்று பொது மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னிலை மேல் பாகம், தென்னிலை கீழ் பாகம் ஊராட்சிக்குட்பட்ட கூனம்பட்டி, புளியம்பட்டி, எம்ஜிஆர் நகர், குன்னம்பாளையம், எல்லை மேடு,

மலையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக வேட்பாளரை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சால்வை அறிவித்து மாலை

அணிவித்து வரவேற்றனர் மேலும் அப்பகுதி பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக வேட்பாளர் இளங்கோ பேசுகையில்: தென்னிலை பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டி கொடுத்துள்ளோம்,35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையம் சீரான மின்சாரத்திற்கு ஏதுவாக இருக்கிறது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கூறினார்.

error: Content is protected !!