Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் மார்கழி இசை விழா தொடங்கியது

கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், திருச்சி மாவட்ட கலை மன்றம் சார்பில் மார்கழி இசை விழா நேற்று மேல சித்திரை வீதியில்தொடங்கியது. இவ்விழா நாளை வரை 3- நாட்கள் நடைபெறுகிறது.

விழாவின் முதல் நாளான நேற்று மாலை மார்கழி இசை விழா நிகழ்ச்சியை  மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) செந்தில்குமார், திருச்சி அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மீனலோசனி, திருவையாறு இசைக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் வெங்கடேசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து சின்னமனூர் விஜய கார்த்திகேயன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும், பத்மஸ்ரீ ஐஸ்வர்யா குழுவினரின் வாய்ப்பாட்டும், சென்னை ஷீலா உன்னிகிருஷ்ணன் குழுவினரின் பரதநாட்டியமும், நெய்வேலி ராதாகிருஷ்ணனின் இருவயலின் கச்சேரியும் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!