Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

தென்னிலை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து – பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறையினர்.

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கோமாளிவலசு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேஸ்டேஜ் பஞ்சுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து மொத்தமாக விற்பனை செய்யும் குடோன் இயங்கி வந்தது.

இந்த நிலையில், இன்று மதியம் எதிர்பாராத விதமாக குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால், குடோனில் அதிகளவில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் எரியும் தன்மை கொண்ட பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வெள்ளகோவில் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல்வேறு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து எரிந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடிய பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தால் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வேஸ்டேஜ் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. மேலும், கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்ததால் பொதுமக்கள் சுவாசிப்பதில் சிரமம் அடைந்து அவதிக்குள்ளாகினர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!