Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோழிக்கோடு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாளையத்தில் இயங்கி வரும் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் முதல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அடுத்த தளத்திற்கும் பரவியது. அப்போது கடையில் ஆடைகளை வாங்கிக் கொண்டிருந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து உயிர்த்தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடனேயே வாடிக்கையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!