Skip to content

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜோபின் சாலமோன் (29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்தார்.

ஜோபின் சாலமோன் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கல்வி தொடர்பான வாட்ஸ்-அப் குழுவில் உள்ள மாணவிகளின் எண்களைத் தனியாக எடுத்து, இரவு நேரங்களில் குறுஞ்செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!